ரூ.12 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை
1741864052697

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ரூ.12 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
தமிழில் சரவணன் நடித்த லெஜன்ட் என்ற படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுட்டேலா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு 12 கோடி ரூபாய் ஆகும். அது குறித்து வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஊர்வசி.
இதுவரை இந்திய சினிமாவில் 12 கோடியில் எந்த ஒரு நடிகையும் கார் வாங்கியதில்லை என்று கூறப்படும் நிலையில், 12 கோடியில் கார் வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார் ஊர்வசி. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.