“இது தமிழகம் அல்ல…தமிழ்நாடு” போஸ்டர் வெளியிட்டு பட்டையை கிளப்பிய ‘உயிர் தமிழுக்கு’ படக்குழு.

photo

தமிழ்நாடு, தமிழகம்  என கடந்த சில நாட்களாக சர்ச்சை வெடித்து வரும் நிலையில் தற்போது  அதற்கு ஏற்றார் போல அமீரின் ‘ உயிர் தமிழுக்கு’ படக்குழு தரமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அரசியல் கதைக்களத்தில், இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம்உயிர் தமிழுக்கு’. இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி ஆகியோர் முக்கியமான காதாபத்திரங்க்களில் நடித்துள்ளனர்.

photo

இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை செய்துள்ளார்.  படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

photo

அரசியல் பின்னணியில் தயாரான இந்த படத்திலிருந்து தற்போது தமிழ்நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ள தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சையையும் தொடர்பு படுத்தி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் “இது தமிழகம் அல்ல…தமிழ்நாடு” என்ற வசனத்துடன் போஸ்டரில் ஒரு புறன் ஜெ.ஜெயலலிதா, மற்றொரு புறம் கலைஞர் கருணாநிதி நடுவில் இயக்குநர் அமீர் இடம்பெற்றுள்ளனர், இந்த போஸ்டர் வழியாக  தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளையும் படக்குழு தெரிவித்துள்ளனர். 

Share this story