ஈரோட்டில் இடைத்தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி ஒரு பாடலா! - "உயிர் தமிழுக்கு" படத்தின் லிரிக்கல் பாடல்.

photo

ஆதம்பாவா  தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “உயிர் தமிழுக்கு”.  இந்த திரைப்படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் இவரோடு இணைந்து சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர்என பலர் நடித்துள்ளனர். ‘உயிர் தமிழுக்குபடத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

photo

அரசியல் பின்னணியை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னர் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வெளியாகி நல்ல வரவேர்பை பெற்ற நிலையில் தற்போது ‘ஓட்டு கேட்டு” பாடல் வெளியாகியுள்ளது.

photo

தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவும் இந்த தருணத்தில் இப்படியொரு பாடல் வெளியாகியுள்ளது.  இதற்கு முன்கூட தமிழகம், தமிழ்நாடு என சர்ச்சை வெடித்த சமயத்தில் “இது தமிழகம் அல்ல…. தமிழ்நாடு…” என போஸ்டர் வெளியிட்டு மாஸ்காட்டினர் “உயிர் தமிழிக்கு” படக்குழுவினர்.

Share this story