வ கெளதமன் நடிப்பில் ‘மாவீரா’..மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் !

maaveera

வ கெளதமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் வ கெளதமன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘மாவீரா’. வ கெளதமனே இயக்கி நடிக்கும் இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு பாலமுரளி கிருஷ்ணா வசனம் எழுதியுள்ளார். 

https://twitter.com/onlynikil/status/1620650162166304768?t=8cwBI3kyOM22DHiSyyXe0g&s=19

இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மண்ணையும், பெண்ணையும், மானத்தையும் காத்து வாழ்ந்த முந்திரிக்காட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. வி.கே.புரொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் பரபரப்பு சம்பவங்களுடன் அதிரடி ஆக்சனில் உருவாகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் அத்துமீறினால் யுத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 


 

Share this story