வா வரலாம் வா படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

வா வரலாம் வா படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ள வா வரலாம் வா படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "வா வரலாம் வா". எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.  இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. இசை அமைப்பாளர் தேவா இதனை வெளியிட்டார். 

Share this story