‘வாடிவாசல்‘ படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் விலகலா... திடீர் விலகலுக்கு இதுதான் காரணமா ?

vaadivasal

 ‘வாடிவாசல்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. 

vaadivasal

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறு நாவலை தழுவி இப்படம் உருவாகவுள்ளது. கடந்த ஆண்டு இப்படத்திற்கான ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் அருகே ஜல்லிக்கட்டு செட் அமைக்கட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. 

vaadivasal

ஆனால் இந்த படத்தை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரும் ‘வாடிவாசல்‘ படத்தின் பின்னணி இசை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சில அப்டேட்டுகளையும் கொடுத்து வந்தார். இந்நிலையில் இப்படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் அமித்ஷாவை ஜிவி பிரகாஷ் சந்தித்தது தான் காரணம் கூறப்படுகிறது. இதனால் வெற்றிமாறனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story