வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ - தயக்கம் காட்டு சூர்யா.. காரணம் என்ன ?

vaadivasal

 வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி கதாநாயகனாக சூர்யா, தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வந்த சூர்யா, அந்த படத்திலிருந்து விலகி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.

vaadivasal

இந்த படத்தை முடித்து ‘சூரரைப்போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சூர்யாவின் கால்ஷீட் தள்ளிப்போவதால் ‘வாடிவாசல்’ படத்தை நிறுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் இந்த படத்திலிருந்து எந்த நேரமும் விலகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story