கூடவே வந்து பார்த்தீங்களா.. ஹீரோவுடனான கிசுகிசு..நடிகை வாணி போஜன் விளாசல்!

மொழி, அபியும் நானும், மலேசியா டு அம்னீஷியா, பொம்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வாணி போஜன் நடித்துள்ள 'சட்னி சாம்பார்' வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது. ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீஷியாவில் நடித்த வாணி போஜன் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்துள்ளார்.அந்த வெப்சீரிஸை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களுக்கு வாணி போஜன் பேட்டியளித்து வருகிறார்.
தனக்கென எந்தவொரு PR நபர்களும் இல்லை என்றும் இயக்குநர்கள் தனக்கான ரோல் இருந்தால் அழைத்தால் கதை கேட்டு விட்டு நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.தன்னை பற்றி வெளியான கிசுகிசு குறித்தும் போல்டான விளக்கத்தை நடிகை வாணி போஜன் கூறியுள்ளார். .அஞ்சலி மற்றும் ஜெய் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஜெய் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
பரத்துடன் லவ் படத்தில் நடித்த போது ரொம்பவே நெருக்கமாக வாணி போஜன் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியான போது அவருடனும் தொடர்பு படுத்தி கிசுகிசு பரவியது. இந்நிலையில், ஆரம்பத்தில் தன்னைப் பற்றி கிசுகிசு வந்தால், என்னை பற்றி எல்லாம் எழுதுறாங்களா என ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால், அதன் பின்னர், எல்லாமே பொய்யாக இருப்பதால் அதை கண்டுக் கொள்வதில்லை. கூடவே வந்து பார்த்ததை போல கதை விடுகின்றனர் என்றும் எந்த நடிகருடனும் நான் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. அவை எல்லாமே பெரிய பொய் என ஒரேயடியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை வாணி போஜன் பேட்டியளித்துள்ளார்.