வாரணம் ஆயிரம் திரைப்படம் மறுவெளியீடு... ரசிகர்கள் வரவேற்பு...

வாரணம் ஆயிரம் திரைப்படம் மறுவெளியீடு... ரசிகர்கள் வரவேற்பு...

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தந்தை, மகன் இடையேயான பாசத்தை காட்டும் இத்திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் சூர்யா  இளைஞராக, ராணுவ வீரராகவும் வயதான அப்பாவாகவும் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருந்தன. படத்தின் பாடல் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படம் சென்னை, கோவையில் பல திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குளில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடும் காணொலி வெளியாகியுள்ளது. 

Share this story