தமிழ் மொழியும் தமிழ்நாடும் ரொம்ப பிடிக்கும்... 'வாத்தி' நாயகியின் சுவாரஸ்யமான பேட்டி !

Samyukta meon

தமிழ் மொழியும், தமிழ்நாடும் ரொம்ப பிடிக்கும் என நடிகை சம்யுக்தா ‌‌‌‌‌‌மேனன் தெரிவித்துள்ளார். 

 மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

Samyukta meon

இதையடுத்து சமீபத்தில் தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியான 'விரூப்க்ஷா' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வரும் மே 5-ஆம் தேதி  வெளியாகிவுள்ளது.

Samyukta meon

இந்த படத்தை ‌‌‌தமிழில் ப்ரோமோஷன் செய்யும் விதமாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய சம்யுக்தா, தமிழ் மொழியும், தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வாத்தி' படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. தற்போது 'விரூபாக்ஷா' படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

Share this story