சம்பளம் வேண்டாம் என அடம் பிடித்த ‘வாத்தி’ பட நடிகை – எந்த காரணத்திற்காக தெரியுமா?

photo

நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திரைபடம் ‘வாத்தி’. இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். கல்வி வியாபாரமாக்கப்படுவதை மைய்யமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தின் பாடலான ‘வா வாத்தி’ பிளாக்பஸ்டர் ஹிட்டானது, அதிலும் அந்த பாடலின் தனுஷ் பாடிய வெர்ஷன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு புறம் இருக்க  வாத்திபட நடிகையான சம்யுக்தா தான் நடித்த ஒரு படம் பிளாப் ஆனதால் அந்த படத்திற்கான சம்பளத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சம்யுக்தா மலையாளத்தில் பாப்கார்ன் படத்தின் மூலமாக தனது சினிமா வாழ்கையை தொடங்கினார். தொடர்ந்து  தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்தார், ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை, இதனால் மீண்டும் மலையாள மொழி படங்களிலேயே நடித்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு தனுஷுடன் ஜோடிசேரும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் சம்யுக்தாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவுந்துவருகிறாது.

photo

இப்படிப்பட்ட  பிளாஸ்பாக் கொண்டுள்ள சம்யுக்தாவின் வாழ்வில் பலரையும் வியப்படைய செய்யும் சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது இவர் கதாநாயகியாக நடித்த எடக்காடு பட்டாலியன்திரைப்படம் பிளாப் ஆனதால் படத்தின் ரிலீஸிற்கு முன்னர் வாங்கிய 65சதவிகித சம்பளம் மட்டும் போதும் மீதி வேண்டாம் என தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம் சம்யுக்தா. அப்படத்தின் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் உட்பட இத்தகவலை அறிந்தவர்கள் சாம்யுக்தாவின் இந்த செயலை கண்டு வியந்து வருகின்றனர்.

photo

Share this story