‘நம்ம வாத்தி வரார்’... ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பு !

vaathi

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் முதல்முறையாக தெலுங்கில் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

vaathi

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதி படம் வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. 

இதையடுத்து சமீபத்தில் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


 

Share this story