‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? – போஸ்டர் வெளியிட்ட படக்குழு.

photo

தெலுங்கு திரையுலகின் வெற்றி இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “ வாத்தி”.  கடநத் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவது வெளியானது. தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும் , தெலுங்கில் சார் என்ற பெயரிலும் படம் வெளியானது. படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன், சமுத்திரகனி ஆகியோர்  நடித்திருந்தனர். 

photo

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. கலவையான விமர்சனத்தை பெற்ற தனுஷின் வாத்தி திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வெளியாகி ஒன்பது நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 75 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

photo

தனுஷிற்கு முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட், அதிலும் ‘வா வாத்தி’ பாடல் நல்ல வரவேற்பை ரசிகர்கள் இடத்தில் பெற்றது. சமீபத்தில் கூட அந்த பாடலின் தனுஷ் பாடிய வெர்ஷன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.  

photo

 

Share this story