தனுஷ் எழுதிய ‘வாத்தி’ முதல் பாடல்... ஜி.வி.பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

vaathi

 தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து முக்கிய அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். 

நடிகர் தனுஷ் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘வாத்தி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனனும், சாய் குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

vaathi

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது. அதில் முதல் பாடலாக காதல் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 


 

Share this story