‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு- ‘வாத்தி கம்மிங் ஒத்து’.......

photo
தனுஷின்  ‘வாத்தி’ பட ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி  திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வாத்தி’. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர்   தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்தமிழ்தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று  மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.  

photo

மிஸ்டர் மஜ்னுஉள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்படத்தில்  கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்இவர்களோடு  சாய் குமார் முக்கிய வேடத்தில்  நடித்துள்ளார்ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருவாகியுள்ளது.

photo

இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவுபெற்றுள்ள நிலையில்  தற்போது போஸ்ட்புரொடக்க்ஷன்பணிகள்    நடைபெற்று  வருகிறதுபடம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதாவது படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒரு முறை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Share this story