தள்ளிப்போகும் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி…புதிய ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

photos

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும்வாத்திபடத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

photos

நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார். நடிகை சம்யுக்தா மேனன் தனுஷிற்கு ஜோடியாக  நடிக்கிறார்.   சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

photos

சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவாகிறது.தமிழில்வாத்திஎனறும், தெலுங்கில்சார்’  என்ற பெயரிலும் படம் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தனுஷ் இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

​​​​photo

படத்தின் டீசர், போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியானது ஆனால் தற்போதைய தகவல்படி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளதுஇந்த தகவல் ரசிகர் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story