‘வடசென்னை 2’ எப்போது ! - கண்ஃபாம் செய்த 'வெற்றிமாறன்'.

photo

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ‘வடசென்னை 2’ படம் எப்போது தயாராகும் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

photo

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் இன்மாதம் 14அம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இதில் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை பாகம் 2 எப்போது தயாராகும் என்பது குறித்து கூறியுள்ளார்.

photo

அதாவது முதலில் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் தான் வெளியாகும். அதனை முடித்துக்கொண்டு சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளாராம். அதன் பின்னர்தான் தனுஷின் ‘வடசென்னை 2’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளாராம் வெற்றி மாறன்.  விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரான நிலையில் சமீபத்தில் அதன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவலை ருதரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியதும் ரசிகர்கள் உற்சாகமாக ஓலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Share this story