இணையத்தை கலக்கும் வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர்

இணையத்தை கலக்கும்  வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர்

சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி  இயக்கியிருந்தார்.  டிக்கிலோனா திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சந்தானம் மற்றும் இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் வடக்குபட்டி ராமசாமி படத்துக்காக இணைந்தனர். டிக்கிலோனாவைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் கவுண்டமணியின் பிரபல காமெடியை நியாபகப்படுத்தும் விதமாக  குறிப்பாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர்,  மேகா ஆகாஷ், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக வௌியான முன்னோட்டம் சுமார் 60 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

Share this story