வடிவேலுவின் சகோதரர் காலாமானார்.... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்

vadivelu

நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

தமிழில் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். மதுரையை பூர்வீகமாக கொண்ட வடிவேலு, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆனால் மதுரை மாவட்டம் விரகனூரில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

vadivelu

விரகனூரில் உள்ள வீட்டில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி  உடல் நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்த சோகம் நிகழ்ந்து சில மாதங்களே ஆன நிலையில் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

அவரது உடல் மதுரை ஜராவதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்களில் வடிவேலு உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், சினிமாவில் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story