ராஜ்கிரணை கட்டிப் பிடித்து கதறி அழுத வடிவேலு - வைரல் போட்டோஸ்!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக காமெடியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடி காமெடியை ரசிக்காத அவர்களே இருக்க முடியாது அவரின் பாடலாங்குவேஜ் , பேச்சு என வடிவேலுவை கொண்டாடவே ஒரு கூட்டம் இன்றளவும் உள்ளது.
இப்படி தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த வடிவேலு கடந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக வடிவேலு சரமாரியாக தாக்கி பேசினார். சென்ற இடமெல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக வடிவேலு பேசியது அவருக்கே வில்லங்கமாக முடிந்தது. இதையடுத்து வடிவேலுக்கு படவாய்ப்புகளே இல்லாமல் போனது.
இதுவொருபுறமிருக்க வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று ராஜ்கிரண் அடிக்கடி சொல்லியது திரை வட்டாரத்தில் இருந்த பலருக்கும் தெரிந்தது தான். வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப்படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். இருப்பினும் தனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக வடிவேலு கண்டுகொள்ளவில்லை என்ற புகாரும் உள்ளது. சமீபத்தில் நடந்த கலைஞர் 100 நிகழ்ச்சியில் கூட வடிவேலு ராஜ்கிரணுடன் பேட்டரி காரில் வர மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கலைஞர் 100 விழாவில் ராஜ்கிரணை கட்டிப் பிடித்து வடிவேலு கதறி அழுத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் வடிவேலு - ராஜ்கிரண் இடையே உரசல் என்ற பிம்பத்தை உடைத்துள்ளது.