வெள்ள நிவாரணத்திற்காக ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கிய வடிவேலு

வெள்ள நிவாரணத்திற்காக ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கிய வடிவேலு

மிக்ஜாம் புயல் சென்னை நகரையே புரட்டிப் போட்டது. மழை நின்றபோதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவர்களுக்கு பெரும்பாலான திரைப்பட பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். தொடர்ந்து ஜிவி பிரகாஷ், விஜய் டிவி புகழ், வைரமுத்து ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். 

இந்த வகையில், நடிகர் வடிவேலுவும்  6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், வடிவேலுவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story