வடிவேலு - ஃபகத் ஃபாசில் படத்தின் பெயர் அறிவிப்பு!

வடிவேலு - ஃபகத் ஃபாசில் படத்தின் பெயர் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடியில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர்  வடிவேலு. தனது திறமையால் படிபடியாக உயர்ந்து காமெடி உலகின் உச்சம் தொட்டவர். மற்ற காமெடி நடிகருக்கு இல்லாத ஒன்று வடிவேலுக்கு இருக்கிறது என்றால், அது   ஃபேஸ் ரியாக்ஷனும்,  பாடி லாங்குவேஜிம்தான்.  சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தனது காமெடியால் சிரிக்க வைத்தவர்.  பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்த வடிவேலு, 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் சிக்கி சினிமாவை விட்டே விலகினார். அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விஜய்யின் 'மெர்சல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெறவில்லை. 

வடிவேலு - ஃபகத் ஃபாசில் படத்தின் பெயர் அறிவிப்பு!

இறுதியாக மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடித்திருப்பார். தற்போது, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோரும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். சுதிஷ் சங்கர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மாரீசன் என்று தலைப்பு வைத்துள்ளனர். 

Share this story