‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ தோல்விக்கு என்ன காரணம் ?... பிரபல காமெடி நடிகர் கலகல !

muthukalai

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் தோல்விக்கு குறித்து பிரபல காமெடி நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். 

நீண்ட நாள் கழித்து வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைக்கா தயாரிப்பில் உருவான இப்படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிகர்கள் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. 

muthukalai

இந்நிலையில் பொங்கல் விழா ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் நடிகர் முத்துக்காளையிடம், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விதி தன் வேலையை சரியாக செய்தது என்று தான் சொல்லவேண்டும். வடிவேலுவுடன் நாங்க நடிக்கும்போது அவர் நன்றாக வரவேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்று நினைத்துதான் அவருடன் நாங்கள் நடித்தோம். ஆனால் இந்த படத்தில் நடித்தவர்கள் தாங்கள் நன்றாக வரவேண்டும் என்று நடித்தார்கள். அதுவே படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறினார். 

muthukalai

மேலும் பேசிய அவர், நாம் நடித்ததைத்தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் மக்களுக்கு கிடையாது. யாராக இருந்தாலும் தூக்கியெறியக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். நல்லதை மக்கள் ரசிக்கிறார்கள் என்று கூறினார். 

 

Share this story