நாய் சேகர் தலைப்பில் நிலவும் சிக்கல்... வடிவேலு ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் படத்தில் நீடிக்கும் இழுபறி!

vadivelu-34

வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் சில வருடங்கள் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். 

தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். அப்போது அளித்த பேட்டியில் சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில்  நடிக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது." என்று தெரிவித்திருந்தார். 

vadivelu

ஆனால் நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் உள்ளதாம். காமெடி நடிகர் சதிஷ் மற்றும்  குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைத்துள்ளார்களாம். படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று பேட்டியில் வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vadivelu

சமீபத்தில் கூட சுராஜ் வடிவேலு கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் துவக்க விழாவில் நாய் சேகர் என்றவுடன் யார் நினைவுக்கு வருகிறார்கள் என்று கேட்டார். மேலும் நாய் சேகர் தலைப்பு நிச்சயமாக தங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். வடிவேலும் தலைப்பு நிச்சயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார். 

ஆனால் ஏஜிஎஸ் நிறுவனமோ படத்தை வடிவேலுவுக்குத் தரப்போவதில்லை என்று உறுதியாக உள்ளனராம். தங்கள் படம் தான் நாய் சேகர் என்ற தலைப்பில் வெளியாகும் என்று உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

'நாய் சேகர்' படத்தின் தலைப்பு வைகைப் புயலுக்குக் கிடைப்பது டவுட் தான்!

Share this story