ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய வடிவேலு... விரைவில் வெளியாகும் ‘மாமன்னன்’ சூப்பர் அப்டேட்

maamannan

உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

maamannan

இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளது. 

maamannan

இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ஏ.ஆர்.ரகுமானுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் மியூசிக் கம்போசிங் பணிகளில் உள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், வைகைப்புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தோம். பாடல் பதிவின் போது எங்களை சிரிக்க வைத்து மறக்க முடியாத அனுபவத்தை தந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Share this story