வைபவ்வின் ‘காட்டேரி’ படம் மிரட்டியதா ?.. திரைவிமர்சனம் !

katteri
 வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திகில் படமான ‘காட்டேரி’ படத்தின் திரைவிமர்சனம். 

ஒரு மலை கிராமத்தில் கோவில் திருவிழா நடக்கிற காட்சியோடு படம் தொடங்குகிறது.திருவிழாவுக்கான டீட்டெயிலிங் சூப்பர்.கலர் டோன்… காட்சிப் படுத்தியிருந்த விதம் எல்லாத்தையும் பார்க்கிற போது ஒரு அனுபவத்துக்கு கொண்டு போகப் போகிறார்கள் என்று நினைத்தால், டோட்டலா ஸீன் மாறிடுச்சு.

யாரோ ஒரு அடையாளம் தெரியாத ஒரு ஆள்,கரண்டு கம்பியை வெட்டிவிடுறான். மொத்தப் பேரும் கொடூரமாகச் செத்துப் போகிறார்கள்.அந்த ஒரு காட்சியே ஹாலிவுட் தரம். இந்தக் காட்சி முடிந்து, கிட்டத்தட்ட நூறு வருசத்துக்கு அப்புறம் கதை ஆரம்பிக்குது.

katteri

வைபவ்,அவரோட புது ஓய்ஃப் பூணம்பாஜ்வா,கருணாகரன்,ரவி மரியா, ஆத்மிகா அண்ட் கோ புதையலைத் தேடி ஒரு மலை கிராமத்துக்குப் போகிறார்கள்.அட்டகாசமான மலை கிராமம்.அந்த ஊர்ல வாழற அத்தனை பேரும் பேய்! இந்த தகவலே இந்த டீமுக்கு லேட்டாதான் தெரியுது.புதையல் கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல, பொழச்சா போதும்னு ஓட ஆரம்பிக்கிறார்கள்… எந்தப்பக்கம் போனாலும் புறப்பட்ட இடத்துலயே கொண்டு வந்து நிறுத்துது அங்கிருக்கிற தீய சக்திகள்.இதுக்கு ஒரே வழி… 'மாத்தம்மா'ங்கிற இன்னொரு பேய் கிட்ட சரண்டராகுறதுதான்.

katteri

வரலட்சுமிதான் மாத்தம்மா.'நான் அழகாருக்கனா' ன்னு அவர் கேட்டால் நேரடி பதில் சொன்னால்… பதில் சொன்னவன் காலி.சுத்தல்ல பதில் சொல்லணும். மாத்தம்மாவுக்கு பதில் சொல்றதுக்குப் பதிலா படம் பார்க்கிற நம்மளை சுத்தல்ல விடுது இந்தக் 'காட்டேரி'!

மாதம்மாவா வர்ற வரலட்சுமி, ஃபிளாஷ் பேக்கில் சொல்ற கிணறு-தங்கப் புதையல் கதையை மட்டுமே முழு படமாகப் பண்ணியிருக்கலாம். அவ்வளவு இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கு. அந்தக் கதையில் வரும் சம்பவத்துக்கான லீடுதான்,ஆரம்பத்தில் வரும் திருவிழா காட்சி! எப்படியாவது நம்மளை பயமுறுத்தவும், சிரிக்க வைக்குவும் முயற்சிக்கிறார்கள் டைரக்டர் அண்ட் ஆர்ட்டிஸ்ட் அத்தனை பேரும்! கடைசிவரை கைகூடாமல் போனதுதான் சோகம்.

Share this story

News Hub