வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆலம்பனா' படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

aalmbana-3

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

முண்டாசுபட்டி’, ‘நேற்று இன்று நாளை’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாரி கே விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆலம்பனா’.  நடிகர் வைபவ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நடிகை பார்வதி கதாநாயகியாக நடித்துள்ளார். முனீஸ்காந்த், காளி வெங்கட், திண்டுக்கல் லியோனி, ஆனந்தராஜ், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

aalambana

இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நிறைவு படம் வெளியாகத் தயாராக உள்ளது. 

தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆலம்பனா படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story