வைபவ் நடித்த ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
1738675072448

வைபவ் நடித்த ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட படமாக ஆலம்பனா உருவாகி இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஆலம்பனா திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்க்ழூ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஒரு நகைச்சுவை கலந்த ஃபேண்டசி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.