வைபவ் நடிக்கும் ரணம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் வைபவ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் அவர், ‘கோதவா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சரோஜா’ படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி, பிரம்மன், டமால் டூமில், ஆம்பள, மாசு என்கிற மாசிலாமணி, அரண்மனை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தள்ளார். அதன்பிறகு கப்பல், ஹலோ நான் பேய் பேசுகிறேன், சிக்ஸர், காட்டேரி, பபூன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வைபவ் நடிப்பில் உருவாகும் 25வது படம் ரணம். இந்த படத்தில் வைபவ்வுடன் இணைந்து நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஷெரீப் இயக்குகிறார்.
இந்நிலையில், ரணம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 23-ம் தேதி படம் வெளியாகிறது.