வைபவ் - அதுல்யா ரவி இணையும் புதிய திரைப்படம்

வைபவ் - அதுல்யா ரவி இணையும் புதிய திரைப்படம்

வைபவ் மற்றும் அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.

வைபவ் - அதுல்யா ரவி இணையும் புதிய திரைப்படம்

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் அறிமுகமான வைபவ் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அறிமுகமானவர். அந்த வகையில் மேயாத மான், கப்பல், லாக்கப், பபூன், ஆர் கே நகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரணம் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

வைபவ் - அதுல்யா ரவி இணையும் புதிய திரைப்படம்

இந்நிலையில் வைபவ் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அறிமுக இயக்குநர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் ஆகிய  இருவரும் இணைந்து இயக்கும் புதிய திரைப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். படத்தில், வைபவ்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார். ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 
 

Share this story