‘கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்’ – துருக்கி சிரியா நிலநடுக்க பாதிப்பை கண்ணீர்மல்க கவிதை மூலம் கூறிய வைரமுத்து.

photo

துருக்கி சிரியா நாடுகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரகணக்கில் உயிர்கள் மாண்டனர். அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர் சிந்தவைக்கும் கவிதையை படைத்துள்ளார்.

photo

பிப்ரவரி 6ம் தேதி யாருமே எதிர்பார்க்காத அந்த ஒரு நிகழ்வு துருக்கி மற்றும் சிரியா மக்களை நிலைகுலைய செய்தது, அதிகாலை 4மணியலவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்  என அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர நிகழ்வால் கிட்டதட்ட 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  உலகையே அதிச்சியடைய  வைத்துள்ளது இந்த நிகழ்வு. இதனை தொடர்ந்து உலக நாடுகள் பல உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஏராளமான நாடுகளால் பல நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

photo

நிலைமை இப்படியிருக்க நிலநடுக்கத்தால் தங்கள் உறவுகள், வீடு, உடைமைகளை இழந்த மக்காளுக்காக கவிஞர் வைரமுத்து கன்ணீர் மல்க கவிதை என்றை எழுதியுள்ளார்.

துருக்கியின் கீழே

பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள்

வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள்

தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது

வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்;

உயிர் பிழைத்தவன்

உறவினன்

உலக நாடுகள்

ஓடி வரட்டும்

கண்ணீர்

சிவப்பாய் வடியும் நேரம்

இந்த கவிதை படிப்போரை கண் கலங்க செய்துள்ளது.

Share this story