அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் ‘வலிமை’!?

அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் ‘வலிமை’!?

அஜித் நடித்து வரும் வலிமை படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் ‘வலிமை’!?

இப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். இருந்தாலும் காயங்களுடன் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துள்ளார். அதையடுத்து அஜித் படப்பிடிப்பிலிருந்து சில நாட்களுக்கு விடுப்பு எடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இடைவெளி இல்லாமல் படத்தை முடித்துக் கொடுக்க உள்ளாராம். எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடையில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாடுகளில் சென்று எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எப்படி எடுத்து முடிக்கப்போகிறார்கள் என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் ‘வலிமை’!?

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this story