'வணங்கான்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடத்தினார்.
Unveiling the World of #Vanangaan! A glimpse into the action-packed, behind-the-scenes making 🔥https://t.co/kQMHwRGBNO@arunvijayno1 's #Vanangaan @IyakkunarBala 's #Vanangaan
— sureshkamatchi (@sureshkamatchi) January 1, 2025
A @gvprakash Magic✨
@vhouseofficial @roshiniprakash_@iam_ridhaa @thondankani @DirectorMysskin…
இந்த படத்தின் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தநிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்தார், ஆனால் ஒரு சில காரணத்தால் அவர் விலகியதால் அருண் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.