ஹப்பாடா…. ஒருவழியா அப்டேட் வந்துட்டு- பாலாவின் ‘வணங்கான்’.

photo

பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும்வணங்கான்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

photo

பிரபல இயக்குனரான பாலா, சூர்யாவை வைத்துவணங்கான்படத்தை இயக்கி வந்தார். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை  வைத்து மீண்டும்வணங்கான்படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார்இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டியும் விலகிய நிலையில் பிரபல கன்னட நடிகையும், தமிழில் 'ஜடா', ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை  ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

photo

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போதைய தகவலாக படத்தின் ஃபஸ்ட் லுக் செப் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share this story