‘சூட்டிங்ல அடிக்கிறாங்க சார்…’- வணங்கான் பட நடிகை கொடுத்த பரபரப்பு புகார்.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் தயாராகும் படமாக அறிவிக்கப்பட்டது ‘வணங்கான்’. இந்த படத்தை சூர்யா இயக்கி அவரே நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் படத்திற்கான பணிகள் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.  படத்திற்காக கன்னியாகுமரியில் செட் அமைக்கப்பட்டு சூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த சமயத்தில், யாருமே எதிர் பார்க்காத விதமாக படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், இயக்குநர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் கருத்துமோதல் நடந்ததாகவும், செய்திகள் வெளியானது.

photo

photo

 இதன் நீட்சியாக பாலாவே இந்த படத்திலுருந்து சூர்யா விலகியதை அறிவித்தார். இந்த நிலையில் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண்விஜயை வைத்து படபிடிப்பு நடத்திவருகிறார் பாலா. இந்த சமயத்தில்தான் சமீபத்தில் வணங்கான் படத்திற்காக கேரளத்திலிருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் எங்கின்ற ஒருங்கிணைப்பாளர்.

photo

 துணை நடிகைகளுள் ஒருவரான லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது “வணங்கான் படத்தில் 3 நாட்கள் நடிக்க மொத்தமாக 22அயிரத்து 600 ரூபாய் பேசினார்கள். ஆனால் சொன்னபடி அந்த தொகையை கொடுக்கவில்லை. அதை எதிர்த்து கேட்டதற்கு அடித்து, உதைக்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூட்டிங் ஸ்பாட் மாற்றும், சினி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

photo

Share this story