வணங்கான் பட விவகாரம் - பாலா பதிலளிக்க உத்தரவு

vanagan

பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படம் கடந்த ஜூலையில் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் அம்மாதத்தில் இப்படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் என்பவர், வணங்கான் படத்தின் தலைப்பை ஏற்கனவே பதிவு செய்ததாக கூறி தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வணங்கான் படக்குழு தரப்பில் ஆஜரனா வழக்கறிஞர், 2022ல்  ‘வணங்கான்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வருவது மனுதாரருக்கு தெரிந்தும் வேண்டுமென்ற பணம் பறிக்கும் நோக்கில் 2 ஆண்டுகள் கழித்து மனு கொடுத்ததாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தின் தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்றும் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எஸ்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

இந்த நிலையில் எஸ்.சரவணனின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this story