‘பேச்சுலர்’ படத்தை ஏன் நிராகரித்தேன் முதல் முறையாக மனம் திறந்த ‘வாணி போஜன்’.

photo

விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்தார், பின் சன் டிவியில் ஒளிபரப்பான  ‘தெய்வமகள்’ சீரியலில்சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணிபோஜன்,  ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கலந்துக்கொண்ட நேர்காணலில் தன்னை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

photo

அதில், விண்ணைத்தாண்டி வருவாயா ஆடிஷன் போனீங்கன்னு கேள்விப்பட்டோம், அதை பத்தி சொல்லுங்க?
என தொகுப்பாளர் கேட்க… அதற்கு வாணிபோஜன் இல்லங்க… எனக்கு என்ன ரோல்ன்னு சொல்ல வில்லை அப்போ நான் ஏர் லைன்ஸில் வேலை பார்த்தேன், இதை பற்றி வீட்டுல கேட்டேன்   அவர்கள் வேண்டாம் என்றார்கள் அதனால் நான் ஆடிஷனிற்கே போகவில்லை  என கூறினார். தொடர்ந்து வேறு எந்தந்த படங்களை ரிஜக்ட் செய்தீர்கள் என்ற கேள்விக்கு… நான் படத்தில் நடிக்க கையெழுத்திட சென்று பேனாவை வைத்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.. அந்த படத்தின் இயக்குநர் எனது நல்ல நண்பர் அவர் படம் வெளியான பிறகும் கூட எனக்கு போன் செய்து “நீங்க ஏன் என்னோட சுப்புவா இல்ல” சண்டையிட்டார்.

photo

அந்த படத்தில் சில நெருக்கமான காட்சிகள் இருக்கும் என பின்னர்தான் தெரிய வந்தது. நான் அப்படி நடிக்க மாட்டேன் ,இப்படி நடிக்க மாட்டேன் என கூறி ஒருவரின் ரசணையை கெடுக்க வேண்டாம், அதற்கு அந்த படத்தை விட்டு விலகிவிடலாம் என முடிவெடுத்து விலகினேன். எனக்கு பதிலாக திவ்யபாரதி மிகசிறப்பாக நடித்திருந்தார், எனக்கு மகிழ்சியாக இருந்தது என முதல்முறையாக இந்த விஷயத்தை பதிவுசெய்துள்ளார் வாணிபோஜன் .

Share this story