என் நிலைமை யாருக்கும் வர கூடாது.. வனிதா விஜயகுமார் எமோஷனல்

Vanitha

வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார். இதுகுறித்து பேசிய வனிதா, என் வாழ்த்துக்கள் எப்போதும் அவனுக்கு உண்டு, அவன் ஹீரோவாவதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.இயக்குனர் பிரபு சாலமன் உருவாக்கி வரும், Mambo என்ற படத்தில் விஜய் ஸ்ரீஹரி நடித்து வருகிறார். இதில், பிரபு சாலமனின் மகள் ஹேசல் சைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிங்கத்தை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.வனிதா விஜயகுமார்: விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகம் ஆவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வனிதா, இது ரொம்ப மோசமான நிலைமை தான், இருந்தாலும் நான் ஒரு அம்மாவாக இதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Mambo

இந்த செய்தியை பார்த்த பலர் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்கள். என் மகன் ஹீரோவாக நடிக்கிறான், இந்த நேரத்தில் நானும் ஹீரோயினாக நடித்துக்கொண்டு இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது என் அம்மாவிற்கு கூட கிடைக்கல, ஏன் எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்று. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், எனக்கு ஸ்ரீஹரி பிறக்கும் போது 18 வயசு, எதுவுமே தெரியாத வயது அது. அப்படி இருந்தாலும், அந்த வயதில் நான் தவறு செய்து விட்டேனே என்று ஒரு முறை கூட நினைத்தது இல்லை. என் மகன் வளர்ந்து இன்றைக்கு ஹீரோவாக பார்க்கும் போது, ஒரு அம்மாவா மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அவன் சின்ன வயதில் இருந்தே திறமையானவன், நல்ல புத்திசாலி நிச்சயம் இந்த படம் அவனுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் என்றார்.

லைம் லைட்டில் இல்லாத ஸ்ரீஹரியை, பல ஆண்டுகளாக நான் போட்டோவில் தான் பார்த்து இருக்கிறேன் இன்னும் நேரில் பார்க்கவில்லை. அவன் கண் என் கண் போலவே இருக்கு, நான் பாதி, அருண் அண்ணா பாதி சாயல் இருக்கிறது என்றார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர் ஒருவர் மகனுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

Share this story