ஹீரோவாக அறிமுகமாகும் வனிதாவின் மகன் : கண்ணீருடன் பதிவு

vanitha


பிரபு சாலமனின் அடுத்த படைப்பான மாம்போ படத்தில் வனிதா விஜயகுமாரின் முதல் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். இது ஒரு சிறுவனுக்கும் , சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது. இதனால், உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கக்த்துடன் பயிற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Mambo


 இந்நிலையில், ஹீரோவாக அறிமுகமாகும் மகனுக்கு வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் பிரபு சாலமனுக்கும் , மகனுக்கு வழிகாட்டியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவை கண்ணீருடன் பதிவிடுவதாக வனிதா குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story