இதெல்லாம் ஒரு சிக்கனா? – கே.எஃப்.சியை வெளுத்து வாங்கிய வனிதா.

photo

வனிதா விஜயக்குமார் ஐதராபாத் விமான நிலையத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

photo

வனிதா விஜய்க்குமார் சினிமாவில் கதாநாயகியாக நடித்தும் கிடைக்காத புகழ், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி சுப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பல சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள் என பலவற்றில் தனது இருப்பை பதிவுசெய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துவருகிறார்.

photo

இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்துவரும் வனிதா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். அந்தவகையில் பல சர்சைகளில் சிக்கி பல விமர்சனத்திற்கு உள்ளான வினிதா இன்று தனக்கு கே.எஃப்.சியால் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.  அதில்,” ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது எனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்தது. கஸ்டமர் சர்வீஸும் மோசம் சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்தது, உலகத்தில் இதுபோன்ற சிறிய சிக்கனை பார்த்ததுண்டா, இது சிக்கனா அல்லது காக்காவாஎன கேள்வி கேட்டு அந்த சிக்கனின் புகைப்படங்களையும் பதிவிட்டு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார் வனிதா. இவரின் இந்த பதிவிர்கு கேஎஃப்சி நிர்வாகம் தரப்பிலிருந்து வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this story