புற்றுநோயாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி... உற்சாகமான குழந்தைகள் !

varalakshmi

புற்றுநோயாளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நடிகை வரலட்சுமி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி. முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான அவர், தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் சைல்ட் கேருக்கு இன்று நடிகை வரலட்சுமி சென்றார். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து குழந்தைகளுடன் சில மணி நேரம் அங்கு இருந்து அவர்களை மகிழ்ச்சியடைய செய்தார். 

varalakshmi

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்றுநோயாளிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மருத்துவர்களுடன் இணைந்த இந்த பிறந்தநாளை கொண்டாடுவது அர்த்தமுள்ளதாக உணர்கிறேன். நம்மோடு இருக்கும் உறவினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்றோம். இவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் பெரிதாக சிரமப்பட வேண்டாம். அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் மட்டுமே கூட போதும். அது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

மேலும் பேசிய அவர், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதையும் நாம் பார்த்து வருகிறோம் என்று கூறினார். 

 

 

Share this story