வரலெட்சுமியின் மிரட்டலான நடிப்பில் ‘V3’ பட டிரைலர் – இது ஓர் உண்மை சம்பவம்.

photo

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வரும் வரலெட்சுமி சரத்குமார், பொதுவாக  தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்வார்.  அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது  ‘V3’ திரைப்படம் தயாரகியுள்ளது.

photo

‘V3’ என்றால் விந்தியா, விக்டீம், வெர்டிக் என்று பொருளாகும். வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை அமுதவாணன்  இயக்கியுள்ளார்.   இந்த படத்தை டீம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அலென் ஜெபஸ்டின் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கிரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. தினம் தினம் நாம் செய்திகளில் பார்க்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை மையப்படுத்தி படத்தின் மையக்கரு அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story