‘அசுனாமா’ பறவையாக மாறிய வரலட்சுமி... பிறந்தநாளையொட்டி ‘கொன்றால் பாவம்’ கிளிம்ஸ் வீடியோ !

Kondraal Paavam

நடிகை வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி ‘கொன்றால் பாவம்’ கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் வரலட்சுமி. அந்த வகையில் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் ‘கொன்றால் பாவம்’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘கரால ராத்திரி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். 

Kondraal Paavam

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Kondraal Paavam

 இப்படத்தின் தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த டீசரை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி ‘கொன்றால் பாவம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸில் உருவாகியுள்ள இந்த கிளிம்ஸ் வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story