வெறித்தனம் செய்யும் வரலட்சுமி... ‘கொன்றால் பாவம்’ டீசரை வெளியிட்ட சமந்தா !

kondral pavam

வரலட்சுமியின் ‘கொன்றால் பாவம்’ படத்தின் டீசரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக மாறிவிட்ட வரலட்சுமி, நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொன்றால் பாவம்’. கன்னடத்தில் மோகன் ஹப்பு எழுதிய நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘கரால ராத்திரி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

kondral pavam

1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை கன்னடத்தில் தமிழ் இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியிருந்தார். தற்போது அவரே தமிழில் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

kondral pavam

இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை பிரபல நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி மிரட்டலாக நடித்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 

Share this story