‘கொன்றால் பாவம்’ பட டீசரை வெளியிடும் சமந்தா... வரலட்சுமி படத்தின் முக்கிய அப்டேட்

KondraalPaavam
 வரலட்சுமியின் ‘கொன்றால் பாவம்’ படத்தின் டீசரை நடிகை சமந்தா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் வரலட்சுமி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்துள்ளனர்.

KondraalPaavam,

இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கன்னடத்தில் மோகன் ஹப்பு எழுதிய நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘கரால ராத்திரி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.  1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை கன்னடத்தில் தயாள் பத்மநாபன் இயக்கியிருந்தார். தற்போது அவரே தமிழில் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.

KondraalPaavam,

இந்நிலையில் இப்படத்தின் டீசரை வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி 7.03 மணிக்கு நடிகை சமந்தா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story