வரலட்சுமியின் ‘சபரி’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
வரலட்சுமியின் ‘சபரி’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழை விட தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சைக்கோலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘சபரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை அனில்காட்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மை கோபி, சஷாங்க் சித்தம்ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இப்படத்தை மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து வருகிறார்.
கோபி சுந்தர் இசையில் உருவாகும் இப்படத்திற்கு நானி சமிடிசெட்டி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.