பாலியல் வன்முறை குறித்து பேசும் ‘எங்கே தான் போகுது’ பாடல்... ‘வி3’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

v3

 வரலட்சுமியின் ‘வி3’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள திரைப்படம் ‘வி3’. கிரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. தினம் தினம் நாம் செய்திகளில் பார்க்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை மையப்படுத்தி படத்தின் மையக்கரு அமைந்துள்ளது.

v3

‘V3’ என்றால் விந்தியா, விக்டீம், வெர்டிக் என்று பொருளாகும். வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை அமுதவாணன்  இயக்கியுள்ளார்.   இந்த படத்தை டீம் ஏ வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அலென் ஜெபஸ்டின் இசையமைத்துள்ளார்.

வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘எங்கே தான் போகுது இந்த தேசம்’ என்று தொடங்கும் இந்த பாடல் பாலியல் வன்முறை குறித்து பேசுகிறது. இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story