'தளபதி 69' படத்தில் வரலட்சுமி சரத்குமார்?

vijay

நடிகை வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து 'சர்கார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், தற்போது தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இவர், விஜய்யுடன் இணைந்து 'தளபதி 69' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

varalakshmi

இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து 'சர்கார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் இரண்டாம் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Share this story