புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள சிகிச்சை மையத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நிகோலாய் என்பரை வரலட்சுமி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இன்று தனது 40வது பிறந்தநாளை வரலட்சுமி கொண்டாடினர். அதனை பயன் உள்ள வகையில் செய்ய புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை எழும்பூரில் உள்ள சைலண்ட் கேர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சந்தித்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது " புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்தும் மருத்துவர்களோடு என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். புற்றுநோய் பற்றி பொதுவாக நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை. நமக்கு நெருங்கியவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் மட்டுமே தெரியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த சிறிய உதவியை செய்தால் கூட போதும் . அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் இருந்து கல்கத்தா வரை சைக்கிளில் பயணம் செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். " வரலட்சுமி தெரிவித்துள்ளார்
அதேபோல் சமீபத்தில் தனது கணவருடன் ஹைதராபாதிற்கு குடி பெயர்ந்துள்ள வரலட்சுமி அங்கிருக்கும் ஹெல்பிங் ஹேண்ட் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கிருந்த 62 குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.