வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' டீசர் ரிலீஸ்...
1746453035926

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‛தி வெர்டிக்ட்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் என்பவர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடத்தபட்டுள்ளது. அண்மையில், படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது. தற்போது ‛தி வெர்டிக்ட்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் திரைப்படம் வரும் மே 30ஆம் தேதி வெளியாக உள்ளது.